For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12:18 PM Nov 15, 2025 IST | Web Editor
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும்    முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

சென்னை கலைவாணர் அரங்கில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் டிச.6 ம் தேதி முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் அதற்கு அடிப்படை தூய்மை தான். எந்த பேரிடரை எதிர்கொண்டாலும் அதில் இருந்து மீண்டு வருவதில் உங்கள் பணி தான் இருக்கிறது. உங்களின் ஒப்பற்ற உழைப்பால் தான் சுற்றுபுரம் சுத்தமாக உள்ளது.

நான் சென்னைக்கு மேயராக இருந்த போது களைஞர் இது பதவி அல்ல பொறுப்பு என்று கூறினார். அதேபோல் நான் உங்களுக்கு சொல்றேன் நீங்கள் செய்வது வேலை ஆல்ல சேவை. ஒட்டுமொத்த சென்னை சார்பாக உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement