Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே தகுதியற்றவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்”- அண்ணாமலை கடும் தாக்கு...!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே தகுதியற்றவர் என்று தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
04:45 PM Nov 20, 2025 IST | Web Editor
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே தகுதியற்றவர் என்று தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

Advertisement

”ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின்  துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே தகுதியற்றவர்.

நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க, சேமிப்புக் கிடங்குகள் மற்றும் உணவுக் கிடங்குகள் அமைக்க, ₹309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கணக்கு காட்டியிருக்கிறதே, எந்த மாவட்டத்தில் எத்தனை சேமிப்புக் கிடங்குகள் அமைத்தீர்கள் என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? விவசாயிகளுக்கு செலவிட வேண்டிய ₹309 கோடி எங்கே சென்றது? குறித்த நேரத்தில் திமுக அரசு நெல் கொள்முதல் செய்யாமல், கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், ₹160 கோடி ஊழல் செய்ததால், நெல் கொள்முதலில் 30 - 40 நாட்கள் தாமதம் ஏற்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கு இன்னும் ஏன் முதலமைச்சரோ, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியோ பதிலளிக்கவில்லை?

கொள்முதல் செய்வதில் திமுக அரசு ஏற்படுத்திய தாமதத்தால், விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, ஈரப்பதம் அதிகமானதற்கு யார் காரணம்? ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்வதில், திமுக அரசு வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டு வீணாகின்றன. ஊழலுக்காக, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கும் திமுக அரசின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசின் மீது பழி போடுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
AnnamalaiBJPCMStalinDMKlatestNewsTNnews
Advertisement
Next Article