Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"முதலீடுகளைக் கோட்டை விடும் முதலமைச்சர் மு.க.ஸ்டலின்" - நயினார் நாகேந்திரன்!

20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
12:12 PM Nov 16, 2025 IST | Web Editor
20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டில் ரூ.1720 கோடி முதலீடு செய்யவிருந்த தென்கொரிய நிறுவனம் ஹ்வாசங், தற்போது தமிழகத்தை விட்டு ஆந்திராவில் முதலீடு செய்யவிருப்பதாய் அறிவித்த சேதி அறிவீர்களா?

Advertisement

"தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" என்று வீண் பேச்சு பேசும் முதல்வர் அவர்களே, உங்கள் அரசாங்கத்தின் விளைவாகத் தான் தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய 20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளன.

"புலி வருது, புலி வருது" என்பது போல ஒவ்வொரு முறையும் தாங்கள் முதலீடு வருகிறது என்று விளம்பரம் வெளியிடுவதும், பின் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாய் செய்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டை ஈர்க்கிறேன் என வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவது, தானாகக் கிடைத்த முதலீட்டையும் எந்தவொரு முயற்சியும் எடுக்காது கோட்டை விடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தைச் சிதைப்பது என மும்முரமாக இருக்கும் நீங்கள், மீண்டுமொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று கூறுவதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது முதல்வரே!

Tags :
BJPCHIEF MINISTERInvestmentsM.K. Stalinnainar nagendran
Advertisement
Next Article