Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என தொடர்ச்சியாக தமிழக உரிமைகளை தாரைவார்க்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

09:53 PM Jun 25, 2024 IST | Web Editor
Advertisement

“முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என தொடர்ச்சியாக தமிழக உரிமைகளை தாரைவார்க்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!”  என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Advertisement

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்ற ஆந்திர அரசின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதனை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி முதல்வர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள்ளார்.

அந்த பதிவில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

''பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.

முல்லைப் பெரியாறு, காவிரி - மேக்கேதாட்டு, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம். பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன். எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
ADMKAIADMKChandrababu NaiduDMKEdappadi palanisamyEPSMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesTamilNaduTN Govt
Advertisement
Next Article