பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இலங்கையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து இந்திய அணி 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. இதன் மூலம் பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.
இந்த நிலையில் பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தைரியம் வழிநடத்தும் போது வரலாறு உயரும். முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற நமது அற்புதமான பெண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.நீங்கள் இந்தியாவின் பெருமையாகவும், உலகிற்கு ஒரு உத்வேகமாகவும் உயர்ந்து நிற்கிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.