முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது..!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
11:38 AM Sep 23, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் அது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,
Advertisement
மேலும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி விவகாரம், ஜிஎஸ்டி விவகாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் தாமோ அன்பரசன், டிஆர்பி ராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.