Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சென்னை கூலிப்படையின் தலைநகராக மாறி உள்ளது!" - அண்ணாமலை பேட்டி!

09:54 PM Jul 08, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை கூலிப்படையின் தலைநகராக மாறி உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை பெரம்பூரில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த பேசினார்.

அப்போது பேசிய அண்ணாமலை கூறியதாவது :

"பகுஜன் சமாஜ் கட்சியில் 20 ஆண்டுகளாக மாநில தலைவராக இருந்தவர் இரண்டு
நாட்களுக்கு முன்பாக நம்மை விட்டு பிரிந்துள்ளார். தமிழ்நாட்டில் இது போல் நடந்தது இல்லை. ஒரு அரசியல்வாதி பகலில் கட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக சார்பாக சிபிஐ விசாரணை கேட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் மற்றும்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்து செல்ல உள்ளோம்.

இதையும் படியுங்கள் : “மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும்” – எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேட்டி!

சென்னை கூலிப்படையில் தலைநகராக மாறி உள்ளது. பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும்
உத்தரவாதம் இல்லாத சூழ்நிலைதான் சென்னையில் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என தெரியவில்லை.  வெட்டுபவர்களுக்கு ஏன் வெட்டுகிறோம் என கூட தெரியாது. அவர்களுக்கு அது ஒரு வேலை. இதற்கான மூளை யார். உளவுதுறை அவர் மீது கவனம் செலுத்தி இருக்கும். யார் வெட்ட சொன்னது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி சொன்னது போல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. காவல்துறையில் உள்ளவர்களுக்கு அழுத்தம் அதிகமாக உள்ளது.  14 நாட்களில் தமிழ்நாட்டில் 134 கொலைகள் நடைபெற்று உள்ளது. இது அபாயகரமான சூழலில் உள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
AnnamalaiArmstrongBahujanSamajPartyBJPBSPChennaileaderTamilNadu
Advertisement
Next Article