பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு - செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயிலானது வருகின்ற 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் - செங்கோட்டை இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டு ஈரோடு - திண்டுக்கல் இடையே இயக்கப்படும்.
அதேபோல், மறுமார்க்கமாக செங்கோட்டை - ஈரோடு இடையே இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயிலானது ஆகஸ்ட் மாதம் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் செங்கோட்டை - திண்டுக்கல் இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கல் - ஈரோடு இடையே இயக்கப்படும்.
மேலும், மயிலாடுதுறை- செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயிலானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 3, 6, 10, 13, 17, 20 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனவும், அதாவது, திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும் எனவும் இந்த ரயிலானது வழக்கம் போல் செல்லும் மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியே இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது