For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் கண்டனம்!

09:59 PM Mar 19, 2024 IST | Web Editor
மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு கஸ்டாலின் கண்டனம்
Advertisement

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களை தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Advertisement

பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடித்து 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது என தெரிவித்தார்.

இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஷோபாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

“இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே அவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசுவதற்கு அவர் ஒன்று, என்.ஐ.ஏ அதிகாரியாக இருக்கவேண்டும், அல்லது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். கண்டிப்பாக இப்படி பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. பாஜகவின் பிளவுபடுத்தும் பேச்சுக்களை தமிழர்களும், கன்னட மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமைதி, நல்லிணக்கம், தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

பிரதமர் உட்பட பாஜகவில் உள்ள அனைவரும் பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த வெறுப்புப் பேச்சை இந்திய தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கையைத் எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement