"விரைவில் இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்" - மத்திய அரசு தகவல்!
இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
இதையும் படியுங்கள் : “சாவடிச்சிருவேன்” என சக வீரரை திட்டிய அஸ்வின் – “மற்றொரு விராட் கோலி” என கலாய்க்கும் நெட்டிசன்கள்!
இதையடுத்து, மீனவர்கள் கைது சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.