“மத்திய அரசு மத ரீதியான நம்பிக்கையில் தலையிட்டு பிளவு ஏற்படுத்துகிறது” - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சனம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாடு மாபெரும் போராட்டம் நடத்திய மாநிலம். இந்த நகரம் வரலாற்று சிறப்பு மிக்க நகரம். 24 வது மாநாடு நடப்பது பெருமையாக இருக்கிறது. மிக நெருக்கமாக அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. இந்த மாநாடு வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும். சர்வதேச அளவில் பிற நாடுகளின் பொருளாதாரத்தை அமெரிக்கா தனது கட்டுபாட்டில் கொண்டுவர முயல்கிறது.
சீனா மிகப்பெரிய வளர்ச்சி கொண்டு இருக்கிறது. அமெரிக்கா சீனாவை கட்டுபடுத்த முயல்கிறது. பாலஸ்தீனத்தில் பிரச்சினை இந்திய அரசின் நடவடிக்கை மக்களுக்கு எதிராக உள்ளது. தேசிய அளவில் கவலை கொள்ளும் அளவில் நிகழ்வுகள் நடைபெறுகிறது . இந்த அரசு கள்ள கூட்டணி வைக்கும் அரசாக செயல்படுகிறது. மக்களை பாதுகாக்க இடது சாரி உள்ளது.
இன்றைக்கு இந்த அரசு மதவெறியை உருவாக்கி. வக்ஃபு வாரிய திருத்த சட்டம் மூலம் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்துகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியில். ஆர்எஸ்எஸ் பத்திரிகையில் கிருஸ்தவம் மீது வெறுப்பை தூவிகிறது. இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்கள் சமூகத்தின் மீது இப்படி தாக்குதல் நடத்துகிறார்கள். சிறுபான்மையினர் அவர்களுக்கு எதிராக செயல்படக் கூடாது என்று மத வெறி அரசியலை செய்கிறார்கள்.
வக்ஃபு சொத்துகள் அவர்கள் அனுபவிக்கும் சொத்து. அரசு செயலிட்டு இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் செயல்பட்டு மத ரீதியான நம்பிக்கையில் தலையிட்டு பிளவு ஏற்படுத்த செயல்படுகிறார்கள். நாட்டு மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்துகிறது. வெறுப்பு பிரச்சாரம் மூலம் மற்ற மதங்கள் இவர்கள் மீது வெறுப்பு உருவாகிறது. குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்கள் தாக்கப்படுகிறார்கள்.
மக்களை பிளவு படுத்த பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களை எதிர்க்க வேண்டும். மத்திய அரசு மத ரீதியாக பிரச்சினையாக திசை திருப்ப செயல்படுகிறது. சென்சார் மூலம் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படத்தை வைத்து மத்திய அரசு அரசியல் செய்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் நீண்ட காலமாக பாதிப்பு ஏற்படுகிறது. மத்திய அரசு சார்பில் எந்த செயல்பாடும் இல்லை.மக்களுக்காக சரியான நிலைப்பாட்டில் மார்சிஸ்ட் கட்சி செயல்படும்.
மக்கள் இந்த அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். விவசாயிகளுக்கு எதிராக பல திட்டங்கள் உள்ளது. ஒரு நாடு ஒரு தேர்தல் பிரச்சாரம் மூலம் தவறான கொள்கைகளை பரப்புகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. CAA-க்கு எதிராக முதல் குரல் கொடுத்தது மார்சிஸ்ட் கட்சி தான். உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்து அதை எதிற்கொண்டோம். மாநில உரிமைகள் பாதிக்கப்பட்டபோது மார்சிஸ்ட் கட்சியின் அனைத்து தலைவர்கள் ஒன்றிணைந்து அதனை மீட்டோம்”
இவ்வாறு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.