For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது” - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

07:59 PM Jun 17, 2024 IST | Web Editor
“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது”   எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Advertisement

இருமாநிலத்திற்கும் இடையேயான பிரச்னையை தீர்க்க வேண்டிய மத்திய அரசு, சோமண்ணாவை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த துரோகம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் நடுநிலையாக இருந்து பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோமண்ணாவை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது;

“தமிழ்நாட்டு மக்களையும, விவசாயிகளையும்  தமிழகத்தை ஆளும் திமுக அரசும், கர்நாடகத்தை ஆளும் அதன் கூட்டாளி காங்கிரஸ் அரசும் ஏமாற்றி வந்த நிலையில், தற்போது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசும் முனைப்புகாட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல.

தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் நடுநிலையாக இருந்து பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோமண்ணாவை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும்.

ஏற்கனவே காவிரி, மேகதாது பிரச்னையில் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கிடையே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டிய மத்திய அமைச்சர் மேகதாது பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேசியதாக ஊடகங்களில் வந்த செய்தி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் பேசாமல் இருப்பதன் காரணம் புரியவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement