For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குஜராத்தில் ரூ.3,300 கோடி முதலீட்டில் #Semiconductor தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!

08:12 PM Sep 02, 2024 IST | Web Editor
குஜராத்தில் ரூ 3 300 கோடி முதலீட்டில்  semiconductor தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
Advertisement

குஜராத் மாநிலத்தின் சனந்தில் ரூ.3,300 கோடி முதலீட்டில், செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததுள்ளது.

Advertisement

கெய்ன்ஸ் செமிகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது ரூ.3,300 கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் சிப் (IC) உற்பத்தி செய்யும் திறன் படைத்த தொழிற்சாலை அமைக்கும் என ஒளிபரப்புத்துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் சிப்கள் தொழில்துறை, வாகன, மின்சார வாகனங்கள், நுகர்வோர் மின்னணுவியல், தொலைத் தொடர்பு மற்றும் மொபைல் போன்கள் ஆகிய பிரிவுகளில் பயன்படுத்தப்படும்.

இந்தியாவில் செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பின் மேம்பாட்டிற்கான திட்டம் டிசம்பர் 2021ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மேலும் 2023ம் ஆண்டு குஜராத் சனந்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான முதல் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்பிறகு பிப்ரவரி 2024ம் ஆண்டு மேலும் மூன்று செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதையும் படியுங்கள் : #Paralympics2024 | தங்கம் வென்றார் இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார்! இந்தியாவுக்கு 2-ஆவது தங்கம்!

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் குஜராத்தின் தோலேராவில் செமிகண்டக்டர் தொழிற்சாலையையும், அசாமின் மோரிகானில் மற்றொரு தொழிற்சாலையையும் நிறுவ உள்ளது. குஜராத்தின் சனந்தில் மற்றொரு செமிகண்டக்டர் தொழிற்சாலை நிறுவவும் சிஜி பவர் திட்டமிட்டுள்ளது. இந்த 4 தொழிற்சாலைகளும் ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டைக் ஈர்க்கும் எனவும், இதன் மொத்த திறன் நாள் ஒன்றுக்கு சுமார் ஏழு கோடி சிப்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement