For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது” - நிர்மலா சீதாராமன் பேட்டி!

04:24 PM Jul 23, 2024 IST | Web Editor
“நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது”   நிர்மலா சீதாராமன் பேட்டி
Advertisement

நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (ஜூலை 23) நடைபெற்றது.

கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதன்முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட்டை  தாக்கல் செய்து உரையாற்றினார்.

பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு டெல்லியில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“மூல ஆதாயங்களுக்காக வரி விதிப்பு அணுகுமுறையை எளிமைப்படுத்த விரும்பினோம். மக்களுக்கான வரி நடைமுறைகள் பட்ஜெட்டில் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உண்மையான சராசரி வரி விதிப்பு குறைந்துள்ளது. நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது. வரி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட், பங்குச்சந்தை முதலீடுகளை ஊக்குவிக்கிறது. நீண்டகால வரி நடைமுறைகளில் எளிமையாக்கப்பட்டுள்ளன. 70% மக்கள் புதிய வரி விதிப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். மறைமுக வரியை வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் அகற்ற வேண்டுமென விரும்பினர். எனவே மறைமுக வரி அகற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக முதலீடுகள் பரந்த அளவில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மறைமுக வரி விதிப்பு காங்கிரஸ் ஆட்சி களத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது”

இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Advertisement