அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்கள்! டாப் 5 இடத்தில் #ActorVijay
ஃபார்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அதிக வரி செலுத்திய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார்.
இந்திய பிரபலங்கள் 2024ஆம் ஆண்டில் அதிக வருமான வரி செலுத்தியவர்களின் பட்டியலை ஃபார்சூன் இந்தியா நிறுவனம் நேற்று (செப்டம்பர் 4ம் தேதி ) வெளியிட்டது. இந்தப் பட்டியலில் நடிகர் விஜய்யின் பெயரும் இடம்பிடித்துள்ளது. யார் யார் இந்தப் பட்டியலில் உள்ளனர். எவ்வளவு வரி கட்டியுள்ளனர் என்பதை இதில் பார்க்கலாம்.
பிரபலங்கள் பட்டியல் ஃபார்சூன் இந்தியா வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான அதிகளவில் வரி செலுத்தியவர்களின் பட்டியலில் ஷாருக் கான், அமிர்கான், சல்மான் கான், அமிதாப் பச்சன், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர் விஜய், இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹார்திக் பாண்டியா, ரிஷப் பந்த், பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்வீர் சிங், ஹிர்த்திக் ரோஷன், ஷாஹித் கபூர், கத்ரினா கைப், பன்கஜ் திரிபாதி, அஜய் தேவ்கன், கியாரா அத்வானி, கபில் சர்மா, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன், மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள் : Rainalert – உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
இந்தப் பட்டியலில் ஷாருக் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் 92 கோடி ரூபாய் வரியாக செலுத்தியுள்ளார். இரண்டவதாக தமிழ்த் திரையுலகின் நடிகர் விஜய் 80 கோடி ரூபாய் வரியாக செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் ரூ. 200 கோடி செலவில் 'லியோ' திரைப்படம் வெளியானது. லியோ திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தது. இந்தப் படத்துக்கு விஜய்க்கு சம்பளமாக ரூ. 120 கோடி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த ஆண்டு கோட் திரைப்படம் வெளியானது, இந்தப் படத்துக்கு சம்பளமாக ரூ. 200 கோடி வரை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக சல்மான்கான் மூன்றாவது இடத்திலும், அமிதாப் பச்சன் நான்காவது இடத்திலும், விராட் கோலி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
வரி செலுத்தியவர்கள் விவரம்
1.ஷாருக்கான் - ரூ. 92 கோடி
2. விஜய் - ரூ. 80 கோடி
3. சல்மான் கான் - ரூ. 75 கோடி
4. அமிதாப் பச்சன் - ரூ. 71 கோடி
5. விராட் கோலி - ரூ. 66 கோடி
6. அஜய் தேவ்கன் - ரூ. 42 கோடி
7. எம்.எஸ். தோனி - ரூ. 38 கோடி
8. ரன்பீர் கபூர் - ரூ. 36 கோடி
9. சச்சின் டெண்டுல்கர் - ரூ. 28 கோடி
10. ஹிருத்திக் ரோஷன் - ரூ. 28 கோடி
11. கபில் சர்மா - ரூ. 26 கோடி
12. சௌரவ் கங்குலி - ரூ. 23 கோடி
13. கரீனா கபூர் - ரூ.20 கோடி
14. ஷாஹித் கபூர் - ரூ. 14 கோடி
15. மோகன்லால் - ரூ. 14 கோடி
16. அல்லு அர்ஜுன் - ரூ. 14 கோடி
17. ஹர்திக் பாண்டியா - ரூ. 13 கோடி
18. கியாரா அத்வானி - ரூ.12 கோடி
19. கத்ரீனா கைஃப் - ரூ. 11 கோடி
20. பங்கஜ் திரிபாதி - 11 கோடி
21. அமீர்கான் - ரூ. 10 கோடி
22. ரிஷப் பந்த் - ரூ. 10 கோடி