"சாதிவாரி கணக்கெடுப்பு எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் கருவி" - தர்மேந்திரா பிரதான் விமர்சனம்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், எஸ். ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சரவை கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு உண்மையான நோக்கங்களுக்கும், வெற்று கோஷங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அம்பலப்படுத்தியுள்ளது என்றார்.
மேலும் இந்த நடவடிக்கையை "கேம்சேஞ்சர் முடிவு" என்று குறிப்பிட்ட மத்தியமைச்சர் தர்மேந்திரா பிரதான், கேம்சேஞ்சர் முடிவு பாஜகவின் உண்மையான நோக்கங்களுக்கும் எதிர்க்கட்சிகளின் வெற்று கோஷங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அம்பலப்படுத்தியுள்ளது.
இருப்பினும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இதை வரவேற்றுள்ளன என தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் எதிர்கட்சிகளை விமர்சித்துள்ள மத்திய அரசு இந்த விவகாரத்தை "அரசியல் கருவியாக" பயன்படுத்துவதாக கடுமையாக சாடியது குறிப்பிடத்தக்கது.