செவிலியர் நிமிஷா பிரியா தொடர்பான வழக்கு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி!
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிமிஷா பிரியாவிற்கு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. இதையடுத்து, 2025-ம் ஆண்டு ஜூலை 16-ம் நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஏமன் அரசு அறிவித்திருந்த நிலையில் இந்தியாவின் கிராண்ட் முஃப்தி காந்தபுரம் ஏபி அபூபக்கர் ஏமன் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் காரணமாக நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிப்போடப்பட்ட தாக கூறப்பட்டது.
இந்த நிலையில் செவிலியர் நிமிஷா பிரியாவின் விவகாரம் தொடர்பாக மதபோதகர் கே. ஏ. பால் என்பவர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அப்போது ஆஜரான மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி,
”இந்த பிரச்னையை மத்திய அரசு உரிய முறையில் கையாண்டு வருகிறது. எனவே இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது. மீண்டும் இந்த வழக்கினை விசாரிப்பது நிமிஷா பிரியாவின் விடுதலையை பாதிக்கலாம். அதே போல ஊடகங்களில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மனுதாரர் கே.ஏ.பால் தரப்பு,
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய முறையில் செயல்படவில்லை.
அரசு தோல்வி அடைந்துள்ளது. ஊடகங்களில் வரக்கூடிய பல்வேறு செய்திகளால் நிமிஷ ப்ரியா விவகாரதரதில். பாதிப்பு ஏற்படலாம், எனவே நிமிஷா பிரியா விவகாரம் தொடர்பான கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று என்று கோரினர்
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்
ஏற்கனவே மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் ஊடகங்களில் யாரும் கருத்து தெரிவிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் ஏமன் நாட்டு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டாம், என்ற மத்திய அரசு வாதத்தை ஏற்று கே.ஏ.பால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.