ADSP வெள்ளத்துரை மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து?
சிவகங்கையில் நடந்த காவல்நிலைய மரணத்தில், வெள்ளத்துரைக்கு சம்பந்தம் இருப்பதாக கூறி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாட்டைச் சேர்ந்த வெள்ளத்துரை, தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1997ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார். இவரின் 25 ஆண்டு பணி காலத்தில் 10க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை செய்து இருக்கிறார்.
2003ம் ஆண்டு சென்னையில் பிரபல ரவுடி அயோத்திக்குப்பம் வீரமணியை, வெள்ளத்துரை என்கவுண்ட்டர் செய்தார். கடந்த 2013ம் ஆண்டு மருதுபாண்டியர் குருபூஜையின்போது சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தியில் காவல்துறை எஸ்.ஐ ஆல்வின் சுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரை வெள்ளத்துரை என்கவுண்ட்டர் செய்தார். இவர் வீரப்பன் தேடுதலிலும் இடம்பெற்றவர்.
இதையும் படியுங்கள் : 2024 மக்களவைத் தேர்தல் : ரூ.8,889 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்! – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்!
வீரப்பனைச் சுட்டுக் கொன்றதால் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பி.யானவர். தற்போது திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை, இன்று காலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், 2013ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காவல்நிலைய மரணத்தில், வெள்ளத்துரைக்கு சம்பந்தம் இருப்பதாக கூறி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏ.டி.எஸ்.பி.வெள்ளத்துரை இன்றுடன் பணி ஓய்வு பெறுவது குறிப்பிடதக்கது.