For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜய்சேதுபதி இந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!

03:29 PM Jan 09, 2024 IST | Web Editor
விஜய்சேதுபதி இந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி
Advertisement

நடிகர் விஜய்சேதுபதி ‘இந்தியை திணிக்க கூடாது’ என்று பேசிய நிலையில் அவர் இந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா? என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. இந்தியை திணிக்கக் கூடாது என்று தான் சொன்னார்கள். இங்கே எல்லோரும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் தடுக்கவில்லை” என்று விஜய் சேதுபதி பேசியிருந்தார். நடிகர் விஜய்சேதுபதி ‘இந்தியை திணிக்க கூடாது’ என்று பேசியது குறித்து,  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று ( ஜன.08) பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: 

‘‘ஜவான் திரைப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக சிறப்பாக நடித்து இருக்கிறார். சப் டைட்டில் இல்லாமல் அதை பார்த்தால், அது இந்தியை திணிப்பதா? கற்றுகொடுப்பதா? அது விவாத பொருள். இந்தி உங்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா என்பதுதான் பாயின்ட். ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவன தயாரிப்பில் அவர் நடிக்கிறார். விஜய்சேதுபதி கருத்து எதுவும் சொல்லவில்லை. அது அவர் உரிமை. அவர் இந்தி, போஜ்புரி, தமிழ் என எதிலும் நடிக்கட்டும். அவர் உரிமை.

அதே சமயம் கருத்து சொல்லும்போது இரண்டு பக்கமும் பார்க்கணும். தமிழ்நாட்டில் பல நிறுவனங்கள் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் இந்தியா முழுக்க ,வட இந்தியாவில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுக்கிறார்கள். அங்கே மொழி பிரச்னை இல்லை. இங்கே தமிழில்தான் பேச வேண்டியது இருக்கிறது என்கிறார்கள்.

இதையும் படியுங்கள் : ISPL சென்னையின் இணை உரிமையாளரான அணியில் என்னுடன் சேருங்கள் – நடிகர் சூர்யா அழைப்பு!

இதுபோன்ற மொழி பிரச்னையால் தமிழ்நாட்டில் முதலீடு வாய்ப்புகள் குறைகிறது. இந்தி விருப்பம் இருந்தால் படியுங்க. வேண்டாம் என்றால் விட்டுவிடுங்க. நாங்க 3 மொழி கொள்கையை சொல்றோம். இந்தி படியுங்கனு மோடி சொல்லவில்லை. கட்டாயம், தமிழ், ஆங்கிலம் படிக்கணும். 3வது மொழியாக உங்களுக்கு தேவைப்படும் மொழியை படியுங்க என்கிறோம்.

இது எங்க கருத்து, விஜய்சேதுபதிக்கு பதில் அல்ல, 4, 5 மொழி கூட படியுங்க. நாளைக்கு நீங்க குளோபல் சிட்டிசன். நாளை வெறும் 2 மொழி வைத்துக் கொண்டு எங்கேயும் போக முடியாது. கூடுதல் மொழி தேவை. இந்தி பிடிக்காவிட்டால் பிரெஞ்சு, ஜெர்மன் படித்து ஐரோப்பாவில் வேலை செய்யுங்க.

இந்தியை நாங்க திணிக்கவில்லை. அதேசமயம், விஜய்சேதுபதி இந்தி படங்களில் நடிக்கலாமா? இந்தி தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கலாமா? அவர் அவரின் தனித்திறமை. அவர் விருப்பம். நாங்க ஏதாவது சொன்னால் தவறாக போய்விடும். விஜய்சேதுபதியின் திரைப்படங்களை நாங்க கைதட்டி ரசித்துவிட்டு போறோம்"

இவ்வாறு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags :
Advertisement