For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1000 கோடி சொத்து, ரூ.912 கோடி டெபாசிட் முடக்கம் - சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 
07:04 PM Feb 04, 2025 IST | Web Editor
தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ 1000 கோடி சொத்து  ரூ 912 கோடி டெபாசிட் முடக்கம்   சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை
Advertisement

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.912 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஆர்.கே.எம் பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்திற்குச் சொந்தமான மூன்று இடங்களில் ED சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சோதனை நடவடிக்கையின் ரூ.1000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் ஆவணங்கள், அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் ரூ.912 கோடி வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உள்ளிட்டவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறது.

ईडी ने पीएमएलए, 2002 के प्रावधानों के तहत मैसर्स आरकेएम पावरजेन प्राइवेट लिमिटेड (आरकेएमपीपीएल) की चल रही जांच के हिस्से के रूप में श्रीमती अंडाल अरुमुगम, एस अरुमुगम और अन्य से जुड़े परिसरों को निशाना बनाते हुए चेन्नई में तीन स्थानों पर तलाशी अभियान चलाया है। तलाशी अभियान के…— ED (@dir_ed) February 4, 2025

கடந்த வாரம் சென்னையில், ஆண்டாள் ஆறுமுகத்துக்குத் தொடர்புடைய மூன்று இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொழிலதிபர்கள் ஆண்டாள் ஆறுமுகம் மற்றும் ஆறுமுகத்துக்குச் சொந்தமான ஆர்கேஎம் பவர்ஜென் தனியார் நிறுவனத்தின் மீது பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 விதிகளின் கீழ் நடந்து வரும் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement