Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்!” - ராகுல் காந்தி

04:01 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கானது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Advertisement

2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய முக்கிய கட்சிகளாக விளங்கும் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திர பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டது.

குறிப்பாக ஆந்திர பிரதேசத்துக்கு ரூ. 15,000 கோடியும், பிகாருக்கு ரூ. 26,000 கோடியும் சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பேரிடர் நிவாரண நிதி, பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களும் இரு மாநிலங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது. சாமானிய இந்தியர்கள் எவ்வித பலனும் இல்லாத வகையில், ஏஏ-வுக்கு (AA - அம்பானி, அதானி) பலன் தரும் விதமாக உள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகளை நகலெடுத்து ஒட்டியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
#budgetsession#financeministerமத்தியபட்ஜெட்2024Budget 2024Budget 2024-25Budget DayBudget Session 2024BUDGET WITH NEWS7TAMILEconomicsIndiaKursi Bachao BudgetloksabhaLokSabha2024NarendramodiNDAGovtNews7Tamilnews7TamilUpdatesNirmalaSitharamanparliamentPMOIndiaRahul gandhirajyasabhaUnionBudget
Advertisement
Next Article