Budget 2025 | "நாடாளுமன்றத்தில் ஒலித்த திருக்குறள்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை !
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது.
தொடர்ந்து 2025 -2026ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது பட்ஜெட் உரையின் போது திருக்குறளை சுட்டிகாட்டி பேசினார். அவரது உரையில்,
"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி"
செங்கோன்மை அதிகாரத்தில் உள்ள திருக்குறளை சுட்டிகாட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.