Budget 2025 | எல்ஐடி திரைகள் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களின் விலை உயரும் !
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது.
தொடர்ந்து 2025 -2026ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது,
"வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு, பள்ளிக் கல்வி, உயர் கல்விக்கு சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவித்தார். இதில் சில திட்டங்களுக்கு வரி உயர்வும் வரி விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எல்ஐடி திரைகள் கொண்டு உருவாக்கப்படும் செல்போன், தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றின் விலை உயரும்" என்று எதிர்பார்க்கப்படுகிறது.