பட்ஜெட் 2025- 26 : பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை நன்றி !
2025 - 2026ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட்டில், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
On behalf of @BJP4TamilNadu and the hardworking middle class of TN, we thank our Hon PM Thiru @narendramodi avl and Hon FM Smt @nsitharaman avl for the announcement of “Zero Income Tax” till ₹12 Lakh income under the New tax regime.
This decision of our Central Govt will boost… pic.twitter.com/ilYOcG2JYm
— K.Annamalai (@annamalai_k) February 1, 2025
"புதிய வரி விதிப்பின் கீழ் ரூ.12 லட்சம் வருமானம் வரை "பூஜ்ஜிய வருமான வரி" அறிவித்ததற்காக, பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தமிழக பாஜக மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம். நமது மத்திய அரசின் இந்த முடிவு நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை அதிகரிக்கும் மற்றும் எண்ணற்ற குடும்பங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.