For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#BSP | ஒரே நேரத்தில் 15 பேர் மீது #Goondas | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி!

02:47 PM Sep 20, 2024 IST | Web Editor
 bsp   ஒரே நேரத்தில் 15 பேர் மீது  goondas   ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கடந்த 05.07.2024 அன்று மாலை. K-1 செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கொலை செய்யப்பட்டார். இது குறித்து K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு துரித விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரிகள்

1.கு.ஹரிகரன், வ/27, த/பெ.குமார், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை

2.மலர்கொடி, வ/49, க/பெ.சேகர் (எ) தோட்டம் சேகர், திருவல்லிக்கேணி, சென்னை

3.சதீஷ்குமார், வ/31, த/பெ.குமரேசன், திருநின்றவூர், சென்னை

4.கோ.ஹரிஹரன், வ/37, த/பெ.கோதண்டராமன், கடம்பத்தூர், திருவள் ளூர் மாவட்டம்

5.அஞ்சலை, வ/51. க/பெ.முத்து, புளியந்தோப்பு, சென்னை

6.சிவா, வ/35, த/பெ.பாலகிருஷ்ணன், காமராஜர் சாலை, சென்னை,

7.பிரதீப், வ/28, த/பெ.திருநாவுக்கரசு, பெரம்பூர், சென்னை

8.முகிலன், வ/32, த/பெ.வின்சென்ட். கோடம்பாக்கம், சென்னை

9.விஜயகுமார் (எ) விஜய், வ/21, த/பெ.நாகராஜன், கோடம்பாக்கம், சென்னை

10. விக்னேஷ் (எ) அப்பு, வ/27, த/பெ.நாகராஜன், கோடம்பாக்கம், சென்னை

11.அஸ்வத்தாமன், வ/31, த/பெ.நாகேந்திரன், வியாசர்பாடி, சென்னை

12.பொற்கொடி, வ/40, க/பெ.சுரேஷ் (எ) ஆற்காடு சுரேஷ், பொன்னை, ராணிப்பேட்டை மாவட்டம்

13.ராஜேஷ், வ/40, த/பெ.லோகநாதன், கோடம்பாக்கம், சென்னை

14.செந்தில்குமார் (எ) குமரா, வ/27, த/பெ.வள்ளிக்கண்ணன். கோடம்பாக்கம், சென்னை

15.கோபி, வ/23, த/பெ.ரவி, கே.கே.நகர், சென்னை ஆகிய 15 நபர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், நேற்று (செப். 19) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், மேற்படி 15 எதிரிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே மேற்கண்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 எதிரிகள் கடந்த 07.09.2024 அன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement