For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! - அவசரகால கதவு வழியாக இறக்கப்பட்ட பயணிகள்!

08:22 AM May 28, 2024 IST | Web Editor
இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்    அவசரகால கதவு வழியாக இறக்கப்பட்ட பயணிகள்
Advertisement

டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பயணிகள் அவசரகால கதவு வழியாக இறக்கிவிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அதிகளவில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். டெல்லியிலிருந்து நாள்தோறும் வெளி மாநிலத்திற்கும், வெளி நாட்டிற்கும் அதிகளவில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இன்று அதிகாலை 5.35 மணியளவில் இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

பயணிகளும் விமானத்தில் அமர்ந்த நிலையில் வாரணாசிக்கு புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில்  வெடிகுண்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகளை அவரசகால கதவு வழியாக விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பாக இறக்கிவிட்டனர். விமானத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த tissue paper-ல் BOMB என்ற வார்த்தை எழுதப்பட்டு இருந்த நிலையில், இதனை பார்த்த விமான பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : "திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்.. தற்போதைய பெயர்களை பார்த்து துக்கப்படுகிறேன்" - 'பனை' இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு! 

தகவல் அறிந்து வந்த  வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு அகற்றும் குழுவினர், தீயணைப்பு துறையினர் என பாதுகாப்பு குழுவினர் விமானத்தை சோதனை செய்தனர். வாரணாசிக்கு செல்ல இருந்த இண்டிகோ விமானத்தை டெல்லி விமான நிலையத்தின் ஒரு பகுதியில் தனிமைபடுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாக டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் எந்த ஒரு வெடி பொருளும் இல்லை என்பது சோதனையில் கண்டறியப்பட்டது. அந்த tissue paper தகவல் என்பது ஒரு ஏமாற்று வேலை என சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement