அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
10:01 AM Sep 24, 2025 IST | Web Editor
Advertisement
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.