Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"உறவாடி கெடுப்பது பாஜகவின் மாடல்" - செல்வப்பெருந்தகை விமர்சனம்!

ஆமை புகுவதைப் போல பாஜக புகும் மாநிலம் சிதைந்து போகும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
11:04 AM Sep 11, 2025 IST | Web Editor
ஆமை புகுவதைப் போல பாஜக புகும் மாநிலம் சிதைந்து போகும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Advertisement

இமானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "இமானுவேல் சேகரன் 68வது குருபூஜையில் காங்கிரஸ்
பேரியக்கத்தின் சார்பாக அவருக்கு மலர் அஞ்சலி, புகழஞ்சலி செலுத்த செல்கிறோம். இம்மானுவேல் சேகரன் இந்த சமூகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தமிழ் சமூகம் ஒற்றுமையாக வேறுபாடு இன்றி வாழ வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கிறார். நாட்டுப்பற்று உள்ள இராணுவ வீரராக இருந்திருக்கிறார். அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதில் காங்கிரஸ் பேரியக்கம் பெருமை அடைகிறது.

Advertisement

சிபி ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு விழா குறித்த கேள்விக்கு, அவர் பதவியேற்பதால் நாட்டுக்கு என்ன பெருமை இருக்கிறது. ஆர்எஸ்எஸ் சார்ந்தவர் பதவி ஏற்பதில் பெருமைப்பட எதுவும் இல்லை. துணை ஜனாதிபதி தேசத்தில் உள்ள அனைவரையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம், இந்த தேசத்தில் பிறந்த பிரஜைகள் அனைவரும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட பிரஜைகள் என்று தலை நிமிர்ந்து சொல்வாரா. ஆர்.எஸ்.எஸ். சொல்வதை சொல்வாரா என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் சொல்வதை நான் கேட்க மாட்டேன் அரசியல் அமைப்பு சட்டம் சொல்வதை கேட்பேன் என்று உரக்க சொல்வாரா என கோரிக்கை வைக்கிறேன்.

இங்கு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், சீக்கியர்களும், பழங்குடியின மக்களும் சமம் என்று சொல்வாரா. யாரையும் தேசத்திலிருந்து அகற்ற மாட்டோம், அகற்ற முயற்சிக்க மாட்டோம். மாநிலங்களில் அனைவருக்கும் சம உரிமை கொடுப்போம், எல்லோரையும் பேச அனுமதி கொடுப்போம் என்று சொல்வாரா. மசோதாக்கள் வந்தால் அதை ஏற்றுக் கொள்வோம் என சொல்வாரா.

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சியின் வாக்குகள் பாஜகவிற்கு கூடுதலாக வந்துள்ளது குறித்த கேள்விக்கு, இப்படிப்பட்ட தேசபக்தர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெகுவிரைவில் நீங்களே கொண்டு வருவீர்கள். அங்கு என்ன நடந்தது என்று நமக்கு தெரியாது. ராகுல் காந்தி பீகாரில் வாக்குத்திருட்டை பற்றி பேசியதை போல். இங்கு எதுவும் வாக்கு திருட்டு நடந்திருக்கிறதா. சட்ட பேரவை, நாடாளுமன்றத்தில் நடந்ததை போல குடியரசுத் தலைவர் தேர்தலிலும் வாக்குத்திருட்டு நடந்திருக்கிறதா என பிரதமர் தான் சொல்ல வேண்டும்.

பிரச்சாரத்தின் போது தலைவர் கட்சி தலைவர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, அப்படி ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை. எங்களை பொறுத்தவரை இருக்கவும் கூடாது. அனைத்துக் கட்சிக்கும் காவல்துறையை விதிக்கும் கட்டுப்பாடுகளை எந்த கட்சியும் ஏறக்கூடாது. விஜய்க்கு இருக்கும் அளவுகோல் தான் இபிஎஸ்கும் இருக்கும் அதுதான் எங்களின் வேண்டுகோள் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு என்ன அதிகாரங்கள் இருக்கிறதோ அதில் தலையிடக்கூடாது. முதல்வருக்கு பாதுகாப்பு உள்ளதால் முன்ன பின்ன இருக்கலாம்.

அதிமுகவை உடைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு, அவர் உலக அதிசயமான வார்த்தையை பேசி இருக்கிறார். அவர்கள் எங்கு உடைக்காமல் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவிற்கு சென்றார்கள் அங்கு இருக்கக்கூடிய வலுவான தலைவரின் குடும்பத்தை சிதைத்தது பாஜக. உறவாடி கெடுப்பது பாஜகவின் மாடல். ஆமை புகுவதைப் போல பாஜக புகும் மாநிலம் சிதைந்து போகும். அதன் பின்பு அதில் மக்கள் அதிகாரத்தில் கைவைத்து, திட்டத்தில் கை வைத்து, மக்களுக்கு சேர வேண்டியதை அம்பானி அதானிடம் கொடுப்பார்கள்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என ஈபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு, ஆட்சியில் இருந்தபோது அமைதியாக இருந்தார்கள். அப்போது அதை செய்திருக்கலாம்
அரசியலுக்காக தானே பேசுகிறார். உண்மையிலேயே பற்று இருந்திருந்தால் அரசியல் தேர்தல் வரும் போது ஏன் பேச வேண்டும், முன்பே ஏன் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.

Tags :
BJPCongressEmanuelSekaranEPSnayinarnagendranSelvapperunthakai
Advertisement
Next Article