For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென் இந்தியாவில் பாஜக 10 இடங்களில் தான் வெற்றி பெறும் - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!

08:09 PM Feb 17, 2024 IST | Web Editor
தென் இந்தியாவில் பாஜக 10 இடங்களில் தான் வெற்றி பெறும்   அமைச்சர் கே என் நேரு பேச்சு
Advertisement

தென் மாநிலங்களில் பாஜக 10 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மற்ற இடங்களில் மாநில கட்சிகள் தான் வெற்றி பெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Advertisement

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சரளை பகுதியில் திமுக சார்பில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், திமுக துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தின் மேடையில் பேசிய அமைச்சர் கேஎன் நேரு பேச்சு கூறியதாவது:

“அதிமுக 10ஆண்டுகள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து உழைத்து ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளோம். ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக மிரட்டல் விடுக்கிறது. மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பாக வெல்வோம் என்று சொல்லி வருகிறார். வாஜ்பாய் காலத்தில் தான் அணுகுண்டு சோதனை செய்து மற்ற நாடுகள் பயப்படும் அளவிற்கு நம் நாட்டை பெருமைபடுத்தினர். அதே வாஜ்பாய் கட்சியில் இருந்து வந்த மோடி 2014-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வருவதாக சொன்ன நிலையில், இதுவரை அடிக்கல் நட்டதோடு இருக்கும் திட்டம் தான் உள்ளது.

மத்திய அரசின் எந்த சார்பிலும் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் உள்ளது. விவசாயிகள் விளை பொருட்கள் கொண்டு வரப்படும் என்று சொல்லியும் பாஜக நடவடிக்கை எடுக்கவில்லை. டெல்லியில் 5 மாநில விவசாயிகள் போராடி வரும் நிலையில் மோடி செவி சாய்க்கவில்லை. டெல்லியில் முதலமைச்சர்கள் சென்று போராட வேண்டிய நிலை தான் மத்தியில் ஆட்சி செயல்பாடுகள் உள்ளது.

சென்னை, தென் மாவட்டங்களில் பேரிடர் பாதிப்புக்கு எந்த நிதியும் தரவில்லை. தமிழ்நாடு 1 ரூபாய் வரியாக கொடுத்தால் 29 பைசா தான் மத்திய அரசு தருகிறது. ஆனால் குறைந்த வரி கொடுக்கும் உத்திரபிரதேசம் மாநிலத்திற்கு நிதி 2 ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. இதே போன்று தமிழகத்தை விட மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக நிதியுதவி வழங்குகிறது.

அமைச்சர்களுக்கு தினந்தோறும் மத்திய அரசு மிரட்டல் விடுத்து வருவது அமைச்சராக இருக்கும் எங்களுக்கு தான் தெரியும். 50ஆயிரம் பேருக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் வேலை வாய்ப்பு தரப்படும் என்று முதலமைச்சர் சொல்லி உள்ளார். இதனால் நமது வீட்டு குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தேர்தலுக்கு பிறகு நல்ல எதிர்காலம் உள்ளது.

இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி வந்தால் தமிழ்நாட்டில் திமுக பங்கேற்கும் அரசாக இருப்பதால் நிறைய திட்டங்கள் கிடைக்கும். ஆளுநர் என்பது மிகப்பெரிய மரியாதை நிறைந்த பதவி. ஆனால் இந்தியாவில் தற்போது உள்ள தமிழகம், கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநில ஆளுநர்கள் ஆட்சி செய்யவிடாமல் இடையூறு செய்து வருகிறார்கள். 

தமிழ்நாட்டின் பாசன பரப்பை அதிகரிக்க இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. தென் மாநிலங்களில் பாஜக 10 இடங்களில் வெற்றி பெறும். மற்றவை மாநில கட்சிகள் தான் வெற்றி பெறும். தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று பாஜக எல் முருகன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்” இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Tags :
Advertisement