டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்ட பாஜக..!
டிஜிட்டல் விளம்பரங்களுக்காக பாஜக ரூ. 101 கோடியை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது.543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின.
இதையும் படியுங்கள் : நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நிறைவு : மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!
இன்று (ஏப். 26) அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், தேர்தலுக்காக கூகுள் மற்றும் அதன் வீடியோ தளமான யூடியூப்பில் அரசியல் விளம்பரங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் செய்தனர். குறிப்பாக, ரூ.100 கோடியைத் தாண்டி விளம்பரத்திற்காக பாஜக செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் கூகுள் மற்றும் யூடியூப் தளங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்த இந்தியாவின் முதல் அரசியல் கட்சி என்ற இடத்தை பாஜக பிடித்துள்ளது.டிஜிட்டல் விளம்பரங்களுக்காக பாஜக ரூ. 101 கோடியை செலவிட்டுள்ளது. இது 2018 முதல் காங்கிரஸ், திமுக மற்றும் அரசியல் ஆலோசனை நிறுவனமான I-PAC குழுவின் மொத்த செலவினத்திற்கு சமம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.100 கோடி..!https://t.co/CnV8a4gCkW| #BJP | #bjparty | #googleads | #LokSabha2024 | #India | #Elections2024 | #Election2024 | #ParliamentElection2024 | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/rUzA9Qkdv0
— News7 Tamil (@news7tamil) April 26, 2024