"கொரோனாவை விட கொடியது பாஜக " - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!
"கொரோனாவை விட கொடியது பாஜக " என மொழிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரை தனியார் பள்ளி வளாகத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
” தாய் தமிழ்நாட்டில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. மொழிப்போர் தியாகிகள் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.
இருப்பது ஒரு உயிர் அது மொழிக்காக போகட்டும் என்று உயிரை மாய்த்த மறவர்களுக்கான நாள் இன்று. மொழிப் போராட்டத்தில் ஆண்களும், பெண்களும் சமமாக நின்றார்கள், கையில் குழந்தைகளையும் வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட போராட்டம் தான் மொழிப் போராட்டம்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று நின்று கொண்டு தியாகிகள் அனைவருக்கும் எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தி திணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
பாஜக இந்தி மொழியை திணிக்க காரணம். இந்தி மக்களை ஏமற்றத்தான். கொரானவை விட கொடுமையானது பாஜக தான். வட மாநில மக்களை ராமர் கோவில் காட்டி திசை திருப்புகிறார்கள். ஆனால் வட மாநில மக்கள் பாஜகவை நம்ப தயாராக இல்லை. இந்துக்களின் முதல் எதிரி பாஜக தான்,
பழனி சாமி தன்னுடைய நாற்காலியை காப்பாற்றுவதில் 4 ஆண்டு காலம் ஓட்டி விட்டார். அதனால்தால் அவர் நீட்டை தமிழகத்தில் அனுமதித்தார். சிறுபான்மை இன மக்கள் அதிமுகவை நம்ப தயாராக இல்லை. வரும் தேர்தலில் பாஜக , அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.