"மிகப்பெரிய ஊழலை திசை திருப்ப பாஜக முயற்சிக்கிறது" -அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு!
"மிகப்பெரிய ஊழலில் சிக்கியதை திசை திருப்ப பாஜக முயற்சிக்கிறது" என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
“பாஜக அரசு திட்டங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது. கோடிக் கணக்கான பணத்தை பாஜக அரசு மிரட்டி பெற்றுள்ளது. இந்த மிகப்பெரிய ஊழலில் சிக்கியதை திசை திருப்ப பாஜக முயற்சித்து வருகிறது.
பணக்காரர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜக நிதி திரட்டி உள்ளது. நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்கள் எவ்வாறு பல கோடி ரூபாய் நிதி அளித்தன? சீனா ஆக்கிரமிப்பை அகற்றாமல் பாஜக வாய்மூடி மௌனம் காக்கிறது.
கச்சத்தீவை மீட்க பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? பிரதமர் மோடி சொல்வது உண்மையாக இருந்தால் 10 ஆண்டு காலத்தில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பு மூலமாக கச்சத்தீவை மீட்டெடுக்க முயற்சி செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?” என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பினார்.