Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லியில் 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை!

12:53 PM Jun 04, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லியில் உள்ள  7 தொகுதிகளிலுமே பாஜக முன்னிலையில் உள்ளது. 

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.   முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.

தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது.  543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  அதன்படி,  பாஜக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 229 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

மற்ற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  இந்த நிலையில்,  டெல்லியில் உள்ள  7 தொகுதிகளிலுமே பாஜக முன்னிலையில் உள்ளது.  அதன்படி,  வடகிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி 31,547 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

மேற்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மகாபல் மிஸ்ராவை எதிர்த்து போட்டியிட்ட கமல்ஜீத் செஹ்ராவத் 31,315 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.   அதேபோல்,  கிழக்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாரை எதிர்த்து போட்டியிட்ட ஹர்ஷ் மல்ஹோத்ரா முன்னிலை வகிக்கிறார்.

Tags :
AAPBJPCongressDelhiElections with News7 tamilParliament Elections2024
Advertisement
Next Article