“தேசம், தாய்நாடு, தாய்மொழி மீது பற்று கொண்ட இயக்கம் பாஜக” - நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“புதிதாக தலைவராக பதவியேற்று உள்ளேன். ஆனால் பாஜக தொண்டர்களுடன் கடந்த 9 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். அவர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றும் எண்ணம் கொண்டவர்கள். தேசம், தாய்நாடு, தாய்மொழி அதன் மீது அதிக பற்று உள்ள இயக்கம் பாரதிய ஜனதா கட்சி. அதன் அடிப்படையில் சிறப்பான முறையில் செயல்படுவோம்.
அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது மூலம் திமுகவிற்கு வெற்றி உறுதியாகி இருக்கிறது என்பதை திமுக இறுதியாக கூற முடியாது. அதற்கு எஜமானர்கள் ஆகிய பொதுமக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். பாஜகவுடன் சேர்ந்து திமுக வெற்றி பெற்றது 1999இல், அதையெல்லாம் மறந்துவிட முடியாது.
டிடிவி, ஓபிஎஸ் போன்றவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா என்ற கேள்விக்கு,
அதை அப்படி கூற முடியாது. நிகழ்ச்சிகளை பொறுத்து கலந்து கொள்வார்கள் என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர்,
“அம்பேத்கர் சிலைக்கு அனைத்து பகுதியில் உள்ள பாஜகவினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பிரதமர் நரேந்திர மோடி சார்பாகவும் பொதுமக்கள் அனைவருக்கும் வரும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து கேட்டபோது, அது தலைமை தான் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.
இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். வெளியில் பேசுவது வேறு, சட்டமன்றத்தில் பேசுவது வேறு. பொது கூட்டம் மேடையில் விமர்சனம் செய்வார்கள். சட்டமன்றத்தில் யாரும் யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது.
ஒருங்கிணைக் கருத்தோட்டத்துடன் தான் ஒருமித்த கருத்தோடு தான் இருப்பார்கள். ஆளும் கட்சி எதிர்கால கருத்துக்களை கூறும் பொழுது, மக்களுக்கு எதிரான கருத்துகளையோ அல்லது கொள்கைகளையோ கூறும் பொழுது, அதற்கு மாற்றுக்கருத்து அல்லது விமர்சனம் மேற்கொள்ளப்படும்.
சட்டமன்றத்தில் அதிமுக அனைவரும் ஒன்றாக தான் பேசிக் கொண்டிருப்பார்கள். அதிமுகவில் அனைவரும் வேண்டியவர்கள். திமுகவில் அனைவரும் எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவர்களுடைய கொள்கை வேறு எங்கள் கொள்கை வேறு” என தெரிவித்தார்.