For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அக்கட்சியினர் இன்னும் உணரவில்லை” - மஹுவா மொய்த்ரா எம்.பி!

09:18 PM Jul 01, 2024 IST | Web Editor
“பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அக்கட்சியினர் இன்னும் உணரவில்லை”   மஹுவா மொய்த்ரா எம் பி
Advertisement

பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அக்கட்சியினர் இன்னும் உணரவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவகாரத்தில் இன்று அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் தங்களது விவாதங்களை முன்வைத்தனர்.

அப்போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ஆளும் பாஜக அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசியதாவது,

“ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு. கடந்த முறை நான் இங்கு நின்றபோது பேச அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஒரு எம்.பி.யின் குரலை நசுக்கியதற்கு ஆளுங்கட்சி பெரும் விலை கொடுத்தது. என்னை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக பொதுமக்கள் உங்கள் 63 உறுப்பினர்களை நிரந்தரமாக உட்கார வைத்துவிட்டனர்.

கடந்த ஆண்டில் என்னை பார்த்து பலர் நீங்கள் நிறைய இழந்துவிட்டீர்கள் என்று கூறினார்கள். ஆமாம் நான் எனது பதவியை இழந்தேன். என் வீட்டை இழந்தேன். அறுவை சிகிச்சையின் போது எனது கர்ப்பப்பையை இழந்தேன். ஆனால் ராகுல் காந்தி கூறியது போல நான் என்னுடைய பயத்தை இழந்து விடுதலையை பெற்றுவிட்டேன். வரலாற்றில் இல்லாத அளவுக்கு குடியரசு தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். இது என்ன மன்னராட்சியா? ஜனநாயக நாட்டில் செங்கோல் எதற்கு?

தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளோம். ஆளும் கட்சியின் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் நெருப்பாற்றில் நீந்தி வந்துள்ளோம். இன்னமும் பாஜகவினர் இது மைனாரிட்டி அரசு என்பதை உணரவே இல்லை. எதிர்க்கட்சிகளை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. கடவுளிடம் ஆணவத்துடன் நடந்து கொண்டால் தண்டிக்கப்படுவர் என்பதை பாஜகவினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது Musalman , Mulla, Madrasa, Mutton ஆகிய எல்லா M வரிசை சொற்களையும் பயன்படுத்தினார். ஆனால் அவர் பயன்படுத்தாத M வரிசை சொல் மணிப்பூர் (Manipur) மட்டுமே. மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளதை நேரில் சென்று பாருங்கள். 2019-ல் நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முதலில் பேசியபோது சர்வாதிகாரத்தின் ஏழு குறியீடுகள் என்பதைப் பற்றி பேசினேன். பெண்களைக் கண்டு பாஜக அச்சப்படுகிறது. அதனால்தான் மகளிர் இடஒதுக்கீட்டை நீங்கள் அமல்படுத்தவில்லை”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement