" திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை.. அதிமுகவை எதிர்க்காததற்கு இதுதான் காரணம்" - ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (மே 20) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"வக்ஃப் சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும் இஸ்லாமியர்கள் பின் தங்கி உள்ளனர். இந்திய சராசரியைவிட இஸ்லாமியர்களின் கல்வித்தகுதி குறைவு. 2005ல் ராஜேந்திர சர்தார் கமிட்டி இஸ்லாமியரது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து அறிக்கை வெளியிட்டமு
வக்ஃப் சட்டம் தொடர்பாக தவெக சார்பில் உச்சநிதமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வக்பு மசோதாவுக்கு சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தவெக வரவேற்றது. வக்பு சட்டத்திற்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவனும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இந்த விவகாரத்தை வாக்கு வங்கியாக அணுகக் கூடாது.
அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடினால் வழக்கு பலம் பெறும். கேரள அரசு எப்படி இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டதோ, அதேபோல் தமிழ்நாடு அரசும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் ஏற்கெனவே தெரிவித்தார்.
அந்த நிலைபாட்டில் அவர் தெளிவாக உள்ளார். அதிமுக - பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என விஜய் அறிக்கை வெளியிட்டார். அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சியை எதிர்ப்பதற்கு காரணம் இல்லை. அதனால்தான் அதனை எதிர்க்கவில்லை"
இவ்வாறு தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.