"மோடியின் உத்தரவாதம்" என்ற பெயரில் வெளியானது பாஜக தேர்தல் அறிக்கை!
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார்.
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், நாடும் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
भारतीय जनता पार्टी GYAN (गरीब, युवा, अन्नदाता व नारीशक्ति) को लेकर आगे बढ़ रही है और 2047 तक विकसित भारत के निर्माण का संकल्प ले रही है।
लोकसभा चुनाव-2024 के संकल्प पत्र के विमोचन के दौरान पीएम श्री @narendramodi ने इन चार वर्गों से एक-एक व्यक्ति को ये संकल्प पत्र सौंपा।… pic.twitter.com/siHRmsR9C3
— BJP (@BJP4India) April 14, 2024
இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (ஏப். 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை “சங்கல்ப் பத்ரா” என்ற பெயரில் பிரதமர் மோடி வெளியிட்டார். இவ்விழாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக, கட்சித் தலைமையகத்தில் டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.