Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இம்மாத இறுதிக்குள் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும்! - அண்ணாமலை தகவல்

01:42 PM Feb 05, 2024 IST | Jeni
Advertisement

பிப்ரவரி மாத இறுதிக்குள் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது :

“2024 நாடாளுமன்ற தேர்தல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் பணிமனையை திறந்துள்ளோம்.  வரும் பிப்.11 தேதி ‘என் மக்கள் என் மக்கள்’ யாத்திரையின் 200வது தொகுதியாக சென்னையை தேர்தெடுத்துள்ளோம்.  ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை பிப்.25ஆம் தேதி பல்லடத்தில் நிறைவடைவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.  அன்றைய தினம் அவரது தலைமையில் எழுச்சி மிக்க மாநாடு நடத்தப்படும். கோவை தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளாக பிரதமர் மோடி வரவில்லை.  எனவே பிரதமர் செல்லாமல் இருக்கக்கூடிய புதிய பகுதியான பல்லடத்திற்கு பிரதமரை அழைத்துச் செல்ல வேண்டும் என இதனை ஏற்பாடு செய்துள்ளோம்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் ஏ.சி.சண்முகம் செய்த பணியை மக்கள் பார்த்து வருகிறார்கள்.  அனைத்து கட்சிகளுக்கும் பலம்,  பலவீனம் இருக்கும். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை என்பது எளிதான ஒன்றல்ல,  கடினமான ஒன்று. யாரெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியை ஏற்றுக் கொள்கிறார்களோ,  அவர்களெல்லாம் பாஜக கூட்டணியில் சேரலாம்.  இந்த மாத இறுதிக்குள் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும்.  பாஜகவின் வாக்கு வங்கி என்பது எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையிலான வாக்கு வங்கியாக மாறும்.

இதையும் படியுங்கள் : “நீங்கள் அளித்த உபசரிப்பு என்னை நெகிழ வைத்தது..!” - ஸ்பெயின் தமிழர்களிடையே முதலமைச்சர் உரை

காசி விஸ்வநாதர் கோயில் சீரமைக்கப்பட்ட பிறகு 8.5 கோடி பேர் தரிசனம் செய்துள்ளனர். திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு.  பாஜக அரசு கோயில்களை சீரமைப்பதும், கோயில்களை திறப்பதும் அரசியலுக்காகவோ, ஆட்சிக்காகவோ இல்லை.  ராமர் கோயிலினால் உத்தரப்பிரதேச அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வருமானமாக வரப்போகிறது.

2024-ல் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது இல்லை.  2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக நிறைய இடங்களில் முதலிடத்தில் வரும்.  தமிழகத்தில் பிரதமர் வேட்பாளராக எவரும் இல்லை.  மக்கள் மாற்றி வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர்.”

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags :
AnnamalaiBJPDMKelection 2024Election2024NarendramodiTNGovt
Advertisement
Next Article