For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மசோதாக்கள் விவகாரம்: நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!

12:55 PM Dec 13, 2023 IST | Jeni
மசோதாக்கள் விவகாரம்  நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு
Advertisement

மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார்.  இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. மேலும் அந்த மசோதாக்கள் மீண்டும் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு கடந்த நவ.18-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மனுக்களை கடந்த நவ. 19-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார்.  ஆனால் காலத்தை வீணடிப்பதற்காகவே ஆளுநர் இவ்வாறான காரியங்களில் ஈடுபடுகிறார் என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இதனிடையே ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு ஆரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில்,  கடந்த நவம்பர் 18-ம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை,  ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும்,  தற்போது நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : மத்தியப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் யாதவ் - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநரும்,  முதலமைச்சரும் நேரில் பேச வேண்டும் என முன்னதாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.  அதன்பேரில்,  நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சென்னையில் மத்திய குழு ஆய்வு நடைபெற்று வருவதால்,  வேறு ஒருநாள் சந்திப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
Advertisement