For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உசிலம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்ற பில் கிளார்க்! - அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

07:19 AM Jun 19, 2024 IST | Web Editor
உசிலம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்ற பில் கிளார்க்    அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்
Advertisement

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய
விவசாயியிடமிருந்து ரூ.16,620 லஞ்சம் பெற்ற பில் கிளார்க்கை லஞ்ச ஒழிப்பு
காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்பட்டையம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன்.
இவர் தனது 7 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல்சாகுபடி செய்து கடந்த 14-ம் தேதி
அம்பட்டையம்பட்டியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை
செய்ய சென்றுள்ளார்.

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் அம்பட்டையம்பட்டியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பில் கிளார்க்காக பணியாற்றி வந்தார். இவர், விவசாயியின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு ரூ.40 வீதம் சுமார் 277 மூட்டைகளுக்கு ரூ.16,620 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி முருகன், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : பாரிஸ் ஒலிம்பிக் | தமிழ்நாட்டை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி

இந்நிலையில், விவசாயி முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவர், அந்த பில் கிளார்க் ஜெகதீசனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். பின்னர், அவர் கொடுக்கும் போது கையும் களவுமாக மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான காவல்துறையினர் பில் கிளார்க் ஜெகதீசனை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement