For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகார் இடைத் தேர்தல் - ஆளும் கட்சி வேட்பாளரை பின்னுக்கு தள்ளி சுயேட்சை வேட்பாளர் வெற்றி!

09:51 PM Jul 13, 2024 IST | Web Editor
பீகார் இடைத் தேர்தல்   ஆளும் கட்சி வேட்பாளரை பின்னுக்கு தள்ளி சுயேட்சை வேட்பாளர் வெற்றி
Advertisement

பீகார் மாநிலம் ரூபாலி தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

Advertisement

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் , தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை காலை 8மணிக்கு தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது.  இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.  இந்த நிலையில், பீகார் மாநிலம் ரூபாலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பீகார் மாநிலம் ரூபாலி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த பீமா பாரதி, ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு மாறியதால், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் பீமா பாரதி போட்டியிட்டார்.  ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கலாதர் பிரசாத் மண்டல் களமிறங்கினார். இவர் சமீபத்தில் முதலமைச்சர் நிதீஷ் குமார் முன்னிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தவர்.

முதல் 6 சுற்று நிலவரப்படி, ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் கலாதர் பிரசாத் முன்னிலை வகித்தார்.  பின்னர் அடுத்த சுற்றுகளில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் முன்னிலை பெற்ற நிலையில், இறுதியில் 68,070 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் கலாதர் பிரசாத்தை விட 8,246 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.  இத்தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த பீமா பாரதி டெபாசிட்டை தக்க வைத்துக்கொண்டார்.

Tags :
Advertisement