Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#BengaluruBuildingCollapse | கர்நாடக முதலமைச்சர் #Siddaramaiah நேரில் ஆய்வு!

01:28 PM Oct 24, 2024 IST | Web Editor
Advertisement

பெங்களூருவில் கட்டுமானப் பணியின் போது அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Advertisement

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் (அக்.22) மாலை 3 மணியளவில் பெங்களூருவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹோரமாவு அகாரா என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டடம் திடீரென முழுமையாக இடிந்து விழுந்தது.

இதில் அந்த கட்டிடத்திற்குள் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் ஹெண்ணூர் போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கு மீட்பு பணிகள் தொடங்கியது.

அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், இதில் மீட்கப்பட்ட 6 பேர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 3 போ் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுவதால், பேரிடா் மீட்புக் குழுவினா் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக நில உரிமையாளா் முனிராஜ் ரெட்டி, கட்டட ஒப்பந்ததாரா் மற்றும் மேஸ்திரி ஏழுமலை ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, கட்டட உரிமையாளரின் மகன் மோகன், ஒப்பந்ததாரர் முனியப்பா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (அக்.24) நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு நடைபெறும் மீட்புப் பணிகள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரின் உடல்நலம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் சித்தராமையா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்த பின், அவர்களுக்கான நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் முதலமைச்சர் சித்தராமையா தெரிரிவத்தார்.

Tags :
ArrestBengalurubuilding collapsedeathhospitalkarnataka cmnews7 tamilPoliceSiddaramaiah
Advertisement
Next Article