For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வங்கதேச போராட்டம் - ஊரடங்கை மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவு!

03:11 PM Jul 21, 2024 IST | Web Editor
வங்கதேச போராட்டம்   ஊரடங்கை மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவு
Advertisement

வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கை மீறி வெளியே வருவோரைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

வங்கதேசத்தில் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அதனை மீண்டும் அமல்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்த நிலையில், மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் நாடு முழுவதும் பரவி, வன்முறையாக வெடித்ததில் இதுவரை சுமார் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர, வன்முறையாளர்களை கண்டதும் சுடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 2 நாட்களுக்கு வங்கதேசம் முழுவதும் பொது விடுமுறையும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களை பார்த்ததும் சுட்டுத்தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் இருந்து சுமார் 1000 மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அந்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் சுமார் 4000 மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

Tags :
Advertisement