மதுரையில் ட்ரோன்கள் பறக்கத் தடை... மீறினால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஏப்.6) தமிழ்நாடு வருகை தருகிறார். நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர் பிரதமர் மோடி மதுரைக்கு வருகை தருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி மதுரையில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : தீராத துயரத்தில் தவிக்கும் மியான்மர்… தோண்ட தோண்ட வரும் உடல்கள்… உயிரிழப்பு எண்ணிக்கை 3,145 ஆக உயர்வு!
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
"ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகிற 6-ம் தேதி வருகை தருகிறார். அன்றைய தினம் அவர் மதுரைக்கு வான்வழியாக வருகை தருகிறார். பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையம், அதனை சுற்றியுள்ள பகுதிகள் உள்பட மதுரை மாவட்ட பகுதிகளில் 6-ம் தேதி ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா விமானங்கள் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.