For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சாலையை கடக்க முயன்ற நபரை கன்னத்தில் அறைந்த காவலர்!

கோவையில் சாலையை கடக்க முயன்ற நபரை இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
02:14 PM Jan 13, 2025 IST | Web Editor
சாலையை கடக்க முயன்ற நபரை கன்னத்தில் அறைந்த காவலர்
Advertisement

கோவையில் சாலையை கடக்க முயன்ற நபரை இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

கோவை சின்ன வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றும் நிறுவனத்திற்கு பொருள்கள் வாங்குவதற்காக நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அவர் தனது செல்போனை பார்த்தபடி சாலையை கடக்க முயன்றார்.

அதே நேரத்தில் அந்த சாலை வழியாக கவுண்டம்பாளையம்  காவலர் ஜெயப்பிரகாஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தார். இருசக்கர வாகனம் வருவதை கவணிக்காத மோகன் ராஜ் அதனை கண்டதும் திடிரேன நின்றுவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த காவலர், மோகன்ராஜின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். வலி தாங்க முடியாத மோகன்ராஜ் காதை பிடித்துக் கொண்டு நடுரோட்டியிலேயே அமர்ந்து விட்டார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதோடு சாலையை கடக்க முயன்ற நபரை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement