Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜம்மு-காஷ்மீர் #AssemblyElections - முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

07:50 PM Sep 18, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 58.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Advertisement

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

துணை ராணுவப் படையினர், ஜம்மு-காஷ்மீர் ஆயுதப் படையினர், காவல்துறையினர் ஆகியோர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

பின்னர், முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. இந்த தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 58.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப். 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1ம் தேதியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அக். 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Tags :
assembly electionsBJPCongressINCjammu kashmirJammu Kashmir Electionnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article