For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

48 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் - எந்தெந்த மாநிலங்களில் யார் யார் முன்னிலை?

12:58 PM Nov 23, 2024 IST | Web Editor
48 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் இடைத்தேர்தல்   எந்தெந்த மாநிலங்களில் யார் யார் முன்னிலை
Advertisement

இந்தியாவின் 14 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முன்னிலை நிலவரம் குறித்து இங்கு காணலாம்.

Advertisement

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுடன் நாடு முழுவதிலும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி உத்தர பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்குவங்கத்தில் 6, அசாமில் 5, பீகார், பஞ்சாபில் தலா 4, கர்நாடகாவில் 3, கேரளா, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2 தொகுதிகள், குஜராத், உத்தராகண்ட், மேகாலயா, சத்தீஸ்கரில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 எம்எல்ஏக்கள் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர்களின் சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாகின. அதேபோல் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்ஃபான் சோலங்கி குற்றவழக்கில் தண்டனை பெற்றதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதனால் அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஒன்பது தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஐந்து தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 3 தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி முன்னிலையில் இருக்கிறது.

பீகார்

பீகாரின் 4 தொகுதிகளில் இரண்டில் பாஜகவும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், ஹிந்துஸ்தானி ஆவம் மோர்ச்சா ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

பஞ்சாப்

பஞ்சாபில் ஆம் ஆத்மி மூன்று இடங்களிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

கர்நாடகா

கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

அசாம்

அசாமில் இடைத்தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளில் பாஜக 2 தொகுதியிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், மற்றவை 2 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் 5 தொகுதிகளின் எம்எல்ஏக்கள் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், ராம்கர் மற்றும் சலும்பர் தொகுதிகளின் எம்எல்ஏக்கள் காலமானதாலும், 7 தொகுதிகளுக்கு நவ.13 இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில்பாஜக மூன்று இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும், பாரத் ஆதிவாசி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

மேற்குவங்கம்

முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தில், இடைத்தேர்தல் நடைபெற்ற 6 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

கேரளா

கேரளாவில் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. பாலக்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸும், திருச்சூர் சேலக்கரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் முன்னிலையில் உள்ளது.

Tags :
Advertisement