அசாம் | 10 மாதக் குழந்தைக்கு HMPV தொற்று!
கொரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளுடன் HMPV எனும் புதிய வைரஸ் சீனா வடகிழக்கு மாகாணங்களில் பரவ தொடங்கியது. சிறுவர்கள், இந்த தொற்று பாதிப்பிற்கு அதிகம் ஆளாகிவரும் நிலையில் உள்ளது. சீனாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் HMPV தொற்று இந்தியா உள்ளிட்ட பக்கத்து நாடுகளுக்கும் பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவில் முதலில் பெங்களூருவில் மருத்துவமனையில் 3 மாத பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதியானது.
அதை தொடர்ந்து, அசாம் திப்ருகார் மாவட்டத்தில் 10 மாதக் குழந்தைக்கு HMPV வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூரினார். இது அசாமில் பதிவான முதல் தொற்று என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பெருந்தொற்றுக்கு அடுத்ததாக சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக் கூடிய HMPV தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது.