தீபாவளி : பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு..!
இந்தியாவில் பரவலான மக்கள் கொண்டாடக்கூடிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த நாளில் மக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்வர்.
ஆனால் அதிகப்படியான பட்டாசு வெடிப்பது ஒலி மற்றும் சுற்று சூழல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் அரசு சார்பில் ஆண்டுதோறும் பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டு தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழக அரசின், தீபாவளி அன்று (அக்.20) காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் குறைந்த ஒலி, குறைந்த மாசு ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளையே வெடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.