மீண்டும் இணையும் ஆர்யா - சந்தானம் காம்போ... குஷியில் ரசிகர்கள்!
சேட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆர்யா மற்றும் சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ் பாகம் இரண்டில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகை தனது காமெடியால் கலக்கி வந்த நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மீனாக்ஷி சவுத்ரி நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதை குறிக்கும் விதமாக நடிகர்கள் சந்தானம், ஆர்யா, கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் தங்கள் எக்ஸ் தளப் பக்கத்தில் நெக்ஸ்ட் லெவல் என பதிவிட்டுள்ளனர். சேட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படங்களை தொடர்ந்து தற்போது டி.டி ரிட்டர்ன்ஸ் இரண்டாம் பாகம் மூலம் மீண்டும் சந்தானம் ஆர்யா கூட்டணி இணைந்து நடிக்க இருப்பதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.